45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இதுவே.
இந்தப் பாடல் இன்று வெளியானதையொட்டி, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபியுடனான தனது பந்தம் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்,” தெரிவித்துள்ளார்.
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2021
ரஜினியின் இந்த உணர்ச்சிப்பூர்வ நினைவஞ்சலியை சமூக வலைத்தளஙக்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.