நவம்பர் 4-ம் தேதி அண்ணாத்த… தீபாவளி விருந்தாக வருகிறது!

நவம்பர் 4-ம் தேதி அண்ணாத்த… தீபாவளி விருந்தாக வருகிறது!

 சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

தர்பார் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தொடங்கி ஹைதராபாதில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீண்டும் தடைப்பட்டது.

இந்நிலையில், அண்ணாத்த படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த பொங்கலுக்கே வெளியாகவிருந்த அண்ணாத்த படம், வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்திலாவது வெளியாகிவிடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தீபாவளி விருந்தாக நவம்பர் 4-ம் தேதி வெளியாவது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *