இந்தியத் திரையுலகில் டிஸ்கோ இசை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இசை அமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான பப்பி லஹிரி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69.
சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியில் நடித்த அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் பப்பி லஹிரிதான். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் இந்தியில் நடித்த மொத்த படங்கள் 28. இவற்றில் சரி பாதி, அதாவது 14 படங்களுக்கு இசை பப்பி லஹிரிதான்.
அந்தப் படங்களின் பட்டியல்…
ஜீத் ஹமாரி,
மேரி அதாலத்,
கங்குவா,
மகாகுரு,
வாஃபாதார்,
கிராஃதார்,
பேவாஃபா,
தமாச்சா,
கைர் கனூனி,
ஃபரிஷ்டே,
பூல் பனே அங்காரே,
தியாகி,
இன்சானியாத் கி தேவ்தா,
ஆதங்க் கி ஆதங்க்
பப்பி லஹிரி இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.