சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ரத்த அழுத்த மாறுபாடு, உடல் சோர்வு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப பிரபலங்கள் பலரும் வாழ்த்தியும், போனில் நலம் விசாரித்தும் வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்று ரஜினியை போனில் நலம் விசாரித்து, விரைவில் நலம்பெற வாழ்த்தினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹைதராபாத், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களை நான் இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.
ஹைதராபாத், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களை நான் இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன்.
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 26, 2020
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் இன்று ரஜினி விரைந்து நலம் பெற்று வர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 26, 2020