சென்னை: தலைவர் ரஜினிகாந்தின் 70–வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70–வது பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக்கை பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் தேசிய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் பலர், நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர்.
ரஜினி வீட்டு முன்பு மட்டுமல்ல, பல்வேறு நகரங்கள், கிராமங்களிலும் ரசிகர்கள் ரஜினிக்காக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரையுலகின் பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள உள்ளனர்.