சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் அவருடன் இணையும் நடிகர்கள் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸே, நடிகர் நடிகைகள் பட்டியலை ஒ்ரு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி நடிக்கவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏறகெனவே செய்திகள் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.