ரஜினி அரசியல் களத்துக்கு வந்துவிடுவார்… நம் பாடு திண்டாட்டம்தான்’ என்ற நிலை இருந்த வரையில் ரஜினியை வசை பாடாத கட்சிகளே இல்லை. வேர் பிடித்து ஆலமரமாய் நிலைத்த திமுகவிலிருந்து நேற்று முளைத்த மய்யம் வரை, வாய்க்கு வந்தபடி விமர்சித்தன. ‘ரஜினி வராமலிருந்தால் போதும், எங்கள் பிழைப்பு ஓடும்’ என்கிற ரீதியில்தான் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் நிலையும் பேச்சும் இருந்தன. பாமக போன்ற கட்சிகளோ ரஜினியுடன் கைகோர்க்கக் காத்துக் கிடந்தன.
இதோ… இன்னும் இரு தினங்களில் கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடப் போகிறார் என ஒட்டுமொத்த அரசியல் உலகமும் காத்துக் கிடக்கையில், யாரும் எதிர்ப்பாராத விதமாக பின்வாங்கினார் ரஜினி. உடல் நிலை, அரசியல் கள யதார்த்தம் அனைத்தையும் மனதில் வைத்தே அவர் இந்த முடிவை அறிவித்தார். அப்படி அவர் அறிவித்தததுதான் தாமதம்… அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. ரஜினி கட்சி ஆரம்பிக்காவிட்டால் என்ன, அவர் ஆதரவும் வாய்சும் எங்களுக்குத்தான் என குருமூர்த்திகள் குரூரமாகக் கருத்துத் தெரிவிக்க, சீமான் போன்றவர்களோ, அய்யா ரஜினியை இனி கொண்டாடுவோம் எனறு அறிக்கை விடுகிறார். கம்யூனிஸ்டுகள் இப்போதே ஆதரவு கேட்டு துண்டுபோட்டுவிட்டன. அதிமுக ஒருபடி மேலேபோய். ரஜினி ஆதரவும் ஆசியும் எங்களுக்குத்தான் என்கிறார்கள். இதோ… அமித்ஷாவின் அடுத்த தமிழக விசிட் ஆரம்பமாகிவிட்டது.
ஒரே ஒரு வாரம்தான்… அத்தனை அரசியல் கட்சிகளும் எத்தனை குட்டிக்கரணம் அடித்துவிட்டன!
வாக்காளன் மறந்துவிடக்கூடாது!
– என்வழி