மக்கள் தலைவர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 12, 2020
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தில், “திரு ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
திரு @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 12, 2020
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஒரு நாள் முன்னதாகவே தனது வாழ்த்துகளை ரஜினிக்குத் தெரிவித்திருந்தார். அதில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச் சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 11, 2020
திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் @rajinikanth அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!
நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்! #HBDRajiniKanth” என்று கூறியுள்ளார்.
அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் @rajinikanth அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!
நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்! #HBDRajiniKanth pic.twitter.com/jTDELjceey
— M.K.Stalin (@mkstalin) December 12, 2020
மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாக தலைவர் ஜிகே வாசன், காந்திய மக்கள் இயக்கத் தலைவரும் ரஜினி கட்சியின் மேற்பார்வையாளருமான தமிழருவி மணியன், ஏராளமான நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.