இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி.

இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இளையராஜாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய ரஜினி, இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவுக்கு அவருடன் சென்றுள்ளார். ஸ்டூடியோவை சுற்றிப் பார்த்து வியந்த ரஜினி, ‘கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது சாமி’ என இளையராஜாவிடம் உணர்ச்சிப்பூர்வமாக பாராட்டினார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். அங்கு நடைபெற்ற இசைப் பதிவு ஒன்றையும் நின்றபடி ரசித்துக் கேட்டுள்ளார்.

அரசியலுக்கு வரமாட்டேன் என அறிக்கை விட்ட பிறகு, கடந்த இரு மாதங்களாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த ரஜினி, முதல் முறையாக ராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும்தான் இப்போது இணையம் முழுவதும் வைரலாகப் பரவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *