ஹைதராபாத்: சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைவர் ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
தொற்று இல்லை என்றாலும் நடிகர் ரஜினிகாந்த ஹைதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்த நிலையில் ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இல்லை, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளும் இல்லை. மேலும் உடல் சோர்வு தவிற வேற எந்த பிரச்சினையும் அவருக்கு இல்லை.
ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் ரஜினி கண்காணிக்கப்படுவார். ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– என்வழி