தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். அப்போது விமானத்தில் படக்குழு மற்றும் விமான பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் ரஜினி. அதற்கு முன்னர் ‘Now Or Never’ என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியதும் வைரலானது.
இந்நிலையில் ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த் அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது கேரக்டருக்கான மேக்கப் உடன் வேட்டி சட்டையில் கெத்தாக, ஸ்டைலாக அமர்ந்திருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷூம் அமர்ந்திருக்கிறார்.
Superstar Rajinikanth at #Annaatthe shoot ! pic.twitter.com/qqdpwtLtsb
— Sun Pictures (@sunpictures) December 14, 2020
‘அண்ணாத்த’ படப்பிடிப்பிலிருந்து டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.
– என்வழி