சென்னை: 44வது செஸ் ஒலம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்து ரசித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ‘ஃபோர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்’ என்ற 5 நட்சத்திர அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டி போட்டிகளைத் துவக்கி வைத்தார். இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்தார்.
சில தினங்களுக்கு முன் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த முன்னோட்டப் படத்தை ரஜினிகாந்த் வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தமிழக அரசு ரஜினிகாந்த் படத்தைப் பயன்படுத்தியது. அடுத்து போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களை உற்ிசாகப்படுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.