தனது 70வது பிறந்த நாளன்று தன்னை வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள், ஊடகத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினியின் 70வது பிறந்த நாள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நாட்டின் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருமே புதிய உற்சாகத்துடன் இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதல் பதிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Respected dear @narendramodi Ji , thank you very much for your kind wishes 🙏🏻 https://t.co/TFw2MHV4bK
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
அடுத்த பதிவில் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் ரஜினி.
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
– என்வழி