தலைவரின் முதல் கார்!

தலைவரின் முதல் கார்!

ன் வாழ்க்கையில் வந்த வழியை என்றும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் ஒரு படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை எப்படி அவமானப்படுத்தினார் என்பதையும், அதை மனதில் வைத்து அவர் எப்படி உயர்ந்தார் என்பதையும் சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டின்போது தெரிவித்தது நினைவிருக்கலாம்.

ரஜினிகாந்த் முதன் முதலாக வாங்கிய கார் ஒரு இத்தாலியன் ஃபியட். அதன் பதிவு எண் TMU 5004. இந்த காரும் அதன் பதிவு எண்ணும் தமிழகத்தில் வெகு பிரபலம். எத்தனையோ நவீன மாடல்களில் கார்கள் வந்தாலும், ரஜினிகாந்த் இந்த ஃபியட்டைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார். சமீப ஆண்டுகளாகத்தான் அவர் இன்னோவா, ஹோண்டா, பிஎம்டபிள்யூ கார்களுக்கு மாறினார். ஆனாலும் தனது முதல் காரை அவர் இன்னும் நல்ல நிலையில் வைத்திருக்கிறார். இந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது அந்தக் காருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார் சூப்பர் ஸ்டார். அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

– என்வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *