சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் ஜெயிலர் படத்துன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதனை ரஜினியின் முதல் தோற்றப் படத்தை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
22.8.22 – 11:00 AM 🔥#Jailer pic.twitter.com/VIieMFd3qO
— Sun Pictures (@sunpictures) August 21, 2022
இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. இதனை ரஜினிகாந்தின் முதல் தோற்றப் படத்தை வெளியிட்டு, அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினியுடன் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு தொடங்குவதை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ரஜினிகாந்தின் முதல் தோற்றப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று முதல் சமூக ஊடகங்களில் இந்தப் படம் தீப்பரவலாக வலம் வந்தது.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022