நாடு இல்லை என்று சொன்னால் நாம் இல்லை..! – மக்களுக்கு ரஜினி வேண்டுகோள்

நாடு இல்லை என்று சொன்னால் நாம் இல்லை..! – மக்களுக்கு ரஜினி வேண்டுகோள்

நாடு இல்லை என்றால் நாம் இல்லை… நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம் என சூப்பர் ஸடார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இதன்படி, இன்று (13-ந் தேதி) முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

அதன்பின்னர், தன் வீட்டின் முன்பு தேசிய கொடியை பறக்கவிட்டிருந்தார். தற்போது ரஜினிகாந்த் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக நம் அனைவரின் ஒற்றுமையை காட்டும் விதமாக சுதந்திர தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ஆம் தேதி சாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நம் வீட்டின் முன்பு கொடியை பறக்க விட்டு நாம் பெருமைப்படுவோம். நாடு இல்லை என்று சொன்னால் நாம் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=TbP9ATqqdyE

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து தீப்பரவலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *