பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் வேட்டையன்!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் வேட்டையன்!

லைகா நிறுவனத் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி இதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளன.

இந்தப் படம் உலகெங்கும் நாளை 7000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் வேட்டையனுக்கு யுஏ9 சான்று வழங்கப்பட்டுள்ளது. 2 மணி 49 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம், தமிழகம் மற்றும் இந்தியாவில் வெளியாவதைப் போன்றே பெரிய கொண்டாட்டத்தோடு, உலகின் பல நாடுகளிலும் வேட்டையன் வெளியாகிறது.

வேட்டையன் வெளியாவதையொட்டி, உலகெங்கும் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, உற்சாகத்தோடு நடத்தி வருகின்றனர். அமரிக்காவில் 1200 அரங்குகளில் இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் முதல் நாளில் இதுவரை இல்லாத அளவு பெரும் வசூலைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *