தலைவர் ரஜினியின் பிறந்த நாளான 12.12.2022 அன்று இந்த மறுவெளியீடு நடக்கிறது. முதலில் ரஜினி பிறந்த நாளன்று சில அரங்குகளில் மட்டும் ஒரே ஒரு காட்சி திரையிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பின்னர், இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் இந்தப் படத்தை மறுவெளியீடாக விடப் போகிறார்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பாபா மறுவெளியீடு என்ற செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்களும், திரையுலகினரும் அந்தப் படத்தைப் பார்க்கக் காட்டும் ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும்தான்.
கடந்த ஒரு வாரமாக ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் ஒரு புதுப் படத்தை விட அதிக தாக்கத்தை பாபா மறுவெளியீடு ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்துக்கு DI, மிக்ஸிங், கிராபிக்ஸ் என அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் பாடல்கள், மற்றும் பின்னணி இசையின் தரத்தை மேம்படுத்தித் தரவும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசைவு தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக சில புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் நீக்கப்பட்டு, வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய மற்றும் மாற்றப்பட்ட காட்சிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று டப்பிங் பேசி முடித்தார்.
பாபா படத்தின் புதிய முன்னோட்டக் காட்சி விரைவில் வெளியாகவிருக்கிறது.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவாளர் : சோட்டா கே நாயுடு
தொகுப்பாளர்: விடி விஜயன்
கலை இயக்குனர்: ஜிகே
சண்டை பயிற்சி: ஃபெப்சி விஜயன்
வரிகள்: கவிஞர் வாலி, வைரமுத்து
வசனம்: எஸ் ராமகிருஷ்ணன், ரவீந்தர்
கதை, திரைக்கதை, தயாரிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா