சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு புதிய படங்களைத் தயாரிக்கப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது,
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிகேஎம் தமிழ்க் குமரன்.
சில நிமிட சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த தமிழ்க் குமரன், “தற்போது ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்துக்குப் பிறகு, லைகா நிறுவனத் தயாரிப்பில் இரண்டு புதிய படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது,” என்றார்.
இந்தப் படங்களை இயக்கப் போகிறவர்கள் குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.
ஆனால், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஒரு படத்தையும், இன்னொரு படத்தை மணிரத்னம் இயக்கக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தப் படங்கள் முறையே ரஜினியின் 170 மற்றும் 171 வது படங்கள் ஆகும்.