சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது.
ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ரஜினியின் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் முதல், இரண்டாம் தோற்ற போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகின.
அடுத்து, அண்ணாத்த படத்தில், டி இமான் இசையில், விவேகா எழுதியுள்ள ‘அண்ணாத்த அண்ணாத்த…’ பாடல் இன்று மாலை வெளியானது.
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.