சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் சிறை அதிகாரியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா, ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
Nadakkura Nada Puyalaacchey 🤩
The wait is over! Get ready for the star-studded Grand Audio Launch of #Jailer on July 28th at Nehru Indoor Stadium, Chennai.
Alappara Kelapparom 💥⚡️🙌🏼@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu… pic.twitter.com/7RjIitV6v8— Sun Pictures (@sunpictures) July 22, 2023
பிரமாண்டமாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜெயிலரில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் பங்கேற்கவிருக்கின்றனர். நிகழ்ச்சியில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.