தலைவர் 169!

தலைவர் 169!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169-வது படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

எந்திரன், பேட்ட, அண்ணாத்தே படங்களைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினியின் 169-வது திரைப்படமான இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் ரஜினி மாஸாக அமர்ந்து, தனக்கே உரிய ஸ்டைலில் போஸ் கொடுத்திருக்கிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

#Thalaivar169 என்ற ஹெஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

#Thalaivar169BySunPictures

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *