சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ புதிய படம் குறித்த அறிவிப்பின் ஒரு பகுதியை இன்று வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தலைவர் 170 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
தலைவர் 170 புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் (4-ம் தேதி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட தென்னிந்திய முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தில் நடிக்கவிருக்கும் நடிக – நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை அக்டோபர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக ட்விட்டர் பக்கத்தில் லைகா தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதுகுறித்த மூன்று அறிவிப்புகளை மட்டும் லைகா வெளியிட்டது. அதில் தலைவர் 170 தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் தசெ ஞானவேல் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தனித்தனியா கறுப்பு – வெள்ளையில் அறிவிப்பு வெளியிட்டது லைகா நிறுவனம். மீதியுள்ள தகவல்களை திங்கள்கிழமை வெள்யிடுவதாகக் கூறி, அமைதியாகிவிட்டது லைகா.
தலைவர் 170-ல் மேலே குறிப்பி்ட்டவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் என்பதால், இதில் பெரிய பரபரப்பு ஏதும் ஏற்படவில்லை. மற்ற நடிகர் நடிகைகள், தெழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை இன்று வெளியிடாமல் ஏமாற்றியது ஏன் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். நாளை என்ன அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு தொடர்கிறது.