தலைவர் ரஜினி பிறந்தநாளில் அவர் கேக் வெட்டும் படத்தைப் பகிர்ந்துள்ளார், அவரது இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.
அந்த பதிவில், “எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா” என்று எழுதியுள்ளார். அந்த கேக் “நவ் ஆர் நெவர்” அதாவது, ”இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை” எனும் எழுத்துவடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
“ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்… இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல..” என்ற முழக்கத்துடன் அரசியலில் ரஜினி இறங்கியுள்ளதைக் குறிக்கும் வகையில் இந்த கேக்கை வடிவமைத்துள்ளனர்.