சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் புதிய வீடு கட்டுகிறார். இதற்கான பூமி பூஜை இன்று போயஸ் கார்டனில் நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து வெளியில் வந்த நிகழ்வு இது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.